ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயம் - "சார்லஸ் லீகிளர்க்" முதலிடம்

0 6382
ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயம் - "சார்லஸ் லீகிளர்க்" முதலிடம்

மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிராண்ட் பிரி கார் பந்தயத்தில், ஆரம்பம் முதலே முதலாவதாக வந்த சார்லஸ் லீகிளர்க் வெற்றி வாகை சூடினார்.

அவரை விட 20 வினாடிகள் தாமதமாக பந்தய தூரத்தை கடந்த செர்ஜியோ பெரஸ் 2வது இடத்தையும், ஜார்ஜ் ரசல் 3வது இடத்தையும் பிடித்தனர்.

39வது சுற்றில், நடப்பு சாம்பியனான மேக்ஸ் வெர்ஸ்டப்பனின் கார் புகை வந்தபடி நின்றதால் அவர் போட்டியில் இருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலிய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவிற்கு வார இறுதி நாட்களில் நடைபெறும் விளையாட்டு போட்டி ஒன்றிற்கு 4 லட்சத்து 20,000 பார்வையாளர்கள் திரண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments